உக்ரைனில் 400க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொடூரமாக கொல்லப்பட்ட புச்சா படுகொலையின் ஓராண்டு நினைவு தினத்தை அதிபர் ஜெலன்ஸ்கி நினைவுகூர்ந்துள்ளார்.
தலைநகர் கிவ்வில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் புச்சா பகுதியில் கடந்த ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி முதல் ஏப்ரல் முதல் வாரம் வரை சண்டை நடைபெற்றது.
ரஷ்ய துருப்புகள் வெளியேறிய பின்னர்தான் புச்சா நகரில் ஏராளமான பொதுமக்கள் கை, கால்கள் துண்டாடப்பட்டும், பின்னந்தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டும் கொடூரமாகக் கொல்லப்பட்டது தெரியவந்தது.
கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் சாலையில் ஆங்காங்கே கிடந்த காட்சிகள் உலகையே உலுக்கின.
Discussion about this post