கனடாவில் திருடப்பட்ட ஒரு தொகுதி கார்கள் ஆபிரிக்காவின் மொரோக்கோவில் மீட்கப்பட்டுள்ளது.
கனடாவின் ஹால்டன் பிராந்தியத்தில திருடப்பட்ட சுமார் 25 வாகனங்கள் மொரொக்கோவில் கனேடிய பொலிஸார் மீட்டுள்ளனர்.
இந்த கார்கள், மத்திய கிழக்கின் டுபாய்க்கு அனுப்பி வைக்கப்படவிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.
பிரபல்யமான கார் வகைகளில் ஒன்றான ரோல்ஸ் றயிஸ்; ரக வாகனம் உள்ளிட்ட 2.1 மில்லியன் டொலர் பெறுமதியான வாகனங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கனடாவின் வாகனத் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
கனடாவில் கொள்ளையிடப்படும் வாகனங்கள் வெளிநாடுகளுக்கு இரகசியமாக கொண்டு செல்லப்பட்டு அவை அங்கிருந்து வேறும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மொரொக்கோவில் கனேடிய பொலிஸாரினால் மீட்கப்பட்ட கார்கள் கனடாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக ஹால்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலதிக செய்திகளைத் தெரிந்துகொள்ள:
Discussion about this post