காடு ஒன்றில் கரடியிடம் சிக்கிய தருணத்தில் இளம்பெண்ணின் புத்திசாலித்தன முடிவால் உயிர் தப்பிய காணொளி வைரலாகி வருகிறது.
சுற்றுலா சென்றபோது தனது தோழிகளுடன் இளம்பெண் ஒருவர் காட்டு வழியே பயணித்துள்ளார். அப்போது, வழியில் காட்டு பகுதியில் இருந்து ஆள் உயரத்திற்கு கருமை நிறத்தில், பெரிய கரடி ஒன்று அவர்களை பின் தொடர்ந்து நெருங்கியுள்ளது.
பொதுவாக வனவிலங்குகள் தங்களுக்கு தொந்தரவு ஏற்படும்போது, அவை தாக்கும் இயல்பு கொண்டவை. அதுவும், கரடியை பற்றி நாம் சில கதைகளில் படித்து இருப்போம். அதன்படி, அந்த இளம்பெண் அமைதியாக அப்படியே நின்று விட்டார்.
அவரது இந்த புத்திசாலித்தன முடிவு அவருக்கு கை கொடுத்து உள்ளது. மெல்ல நடந்து வந்த கரடி, இளம்பெண்ணின் பின்னால் நெருங்கி நின்றபடி காணப்பட்டது.
இதன்பின் இரண்டு கால்களில் மனிதர்களை போன்று நின்று கொண்டு, இளம்பெண்ணின் பின்னால் இருந்து அவரை அணுகி உள்ளது. அவரை சற்று நேரம் மோப்பம் பிடித்தபடி இருந்தது.
அவருடன் வந்த இரு தோழிகளும் அமைதியாக நின்று விட்டனர். எனினும், அவர்களில் சற்று தொலைவில் நின்ற ஒருவர் கரடியை பார்த்தபடி மெல்ல நடந்து, நடந்து தப்பி போவதற்காக முயற்சித்துள்ளார்.
இந்த இளம்பெண்ணை சுற்றி, சுற்றி பார்த்த அந்த கரடி, பின்னர் அவரை இழுத்து தள்ளி சென்றது. அப்போதும் இளம்பெண் அமைதியாக நின்று உள்ளார். அவரது முடியை பிடிக்கவும், முகத்தில் மோப்பம் பிடிக்கவும் செய்து உள்ளது.
How to survive a bear attack… stand still and stay silent 🤫😳 pic.twitter.com/0uI9X5cgC9
— OddIy Terrifying (@OTerrifying) March 24, 2023
Discussion about this post