பேலியகொட மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
புத்தாண்டு காலத்தில் மரக்கறி விலைகள் மேலும் குறையலாம் என மெனிங் பொது தொழிற்சங்கத்தின் செயலாளர் சமிந்த பீரிஸ் குறிப்பிட்டார்.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக, நுகர்வோர் மரக்கறிகளை கொள்வனவு செய்வதை மட்டுப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சில்லறை வியாபாரத்திற்காக தினமும் 50 கிலோ காய்கறிகளை கொள்வனவு செய்து வந்த வியாபாரி தற்போது 10 கிலோவையே கொள்வனவு செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
முன்னைய பண்டிகை மாதங்களில் மரக்கறிகளின் விலை அதிகரித்திருந்த போதிலும், இந்த பொருளாதார சிரமங்களினால் கொள்வனவுகள் குறைந்துள்ளதால், மரக்கறிகளின் விலை குறையலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
Discussion about this post