மலேசியாவில் முறையான ஆவணங்களின்றி தங்கியிருந்த 10 வங்கதேச புலம்பெயர் தொழிலாளர்கள் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் மலேசியாவுக்குள் சென்ற இந்த வங்கதேச தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வந்திருக்கின்றனர்.
இவர்கள் மட்டுமின்றி மொத்தம் 95 தொழிலாளர்கள் வங்கதேசத்தில் உள்ள முகவருக்கு தலா 20 ஆயிரம் மலேசிய ரிங்கட்டுகள் கொடுத்திருக்கின்றனர். மலேசியாவின் செலாங்கூர் பகுதியில் உள்ள பொறியியல் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக அந்த முகவர் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் மலேசியாவின் பினாங்கு சர்வதேச விமான நிலையம் வழியாக வந்த வங்கதேசிகளின் கடவுச்சீட்டுகளை அந்த நிறுவனத்தின் பிரதிநிதிகள் இருவர் எடுத்துச் சென்றதாக சொல்லப்படுகிறது.
கடந்த டிசம்பர் 21ஆம் திகதி வந்த முதல் குழுவில் இருந்த 48 தொழிலாளர்கள் செலாங்கூர் கொண்டு செல்லப்பட்டதாகவும் டிசம்பர் 29ம் தேதி வந்த 47 தொழிலாளர்கள் பினாங்கில் உள்ள நிறுவனத்தின் இடத்தில் வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இவர்கள் மோசமான உணவு, தங்குமிடங்களில் இருப்பதாக பினாங்கு தொழிலாளர் துறைக்கு தகவல் கிடைத்ததை அடுத்து இத்தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
Discussion about this post