பாடசாலை அதிபர் மற்றும் பிரதி அதிபர் ஆகியோர் மாணவர்களின் தலைமுடியை வெட்டி, அவர்களை பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்காமல் வெளியேற்றப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கம்பளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும், இந்த வருடம் கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள 17 மாணவர்கள் இச்சம்பவத்துக்கு முகம் கொடுத்துள்ளனர்.
குறித்த மாணவர்களின் தலைமுடி நீளமாக வளர்ந்துள்ளதால் தலைமுடியை வெட்ட நடவடிக்கை எடுத்ததாக சொல்லப்படுகின்றது.
தலைமுடியை வெட்டிய பின்னர் அந்த மாணவர்களை, அன்றையதினம் நடைபெற்ற பருவத்தேர்வு தொழில்நுட்ப பாடப் பரீட்சை எழுத அனுமதிக்காமல் அதிபர் வெளியேற்றியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post