இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் மாதாந்திர சீசன் டிக்கட்டுடன் ஏறிய பாடசாலை மாணவர் ஒருவர் பேருந்து நடத்துனரால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹபரணை பிரதேசத்தை சேர்ந்த கெக்கிராவ கொட்டகலை பிரிவேனில் கல்வி கற்கும் 10 வயதுடைய நிபுன் கவீஷா ஜும்ஜிம் என்ற பாடசாலை மாணவனே இவ்வாறு தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்
கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த யாழ் டிப்போவுக்குச் சொந்தமான பேருந்தின் நடத்துனரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்.
ஹபரணையில் இருந்து தம்புள்ளையை வந்தடைந்த அவர், கொட்டகலை பிரிவெனாவிற்கு செல்வதற்காக தம்புள்ளையில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த பேருந்தில் ஏறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தம்புள்ளை பேருந்து டிப்போவில் மாதாந்த சீசன் டிக்கெட்டை மாணவர் பெற்றுள்ளதாக விசாரணையில்
தெரியவந்துள்ளது.
பேருந்தில் ஏற வேண்டாம் என நடத்துனர் தெரிவித்தபோதிலும், தற்போது பரீட்சை நடப்பதால் தாமதிக்காமல் பள்ளிக்கு
செல்ல வேண்டும் என கூறி பேருந்தில் ஏற முற்பட்ட மாணவனை நடத்துனர் வெளியே இழுத்து தாக்கியதாக தெரிவித்துள்ளனர் தெரிவித்தனர்.
மேலதிக செய்திகளைத் தெரிந்துகொள்ள:
Discussion about this post