நீதிபதியின் முன்னிலையில் இளைஞர் ஒருவர் யுவதி ஒருவரின் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் யாழ்ப்பாணம் மல்லாகம் நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது.
இதனால், குறித்த இளைஞனை பதினான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரும், அதே இடத்தை சேர்ந்த யுவதியும் சில காலமாக காதலித்து வந்த நிலையில், அந்த இளைஞனின் அநாகரீகமான நடத்தையினால் குறித்த யுவதி தனது காதல் உறவை நிறுத்தியுள்ளார்.
அந்த இளைஞர் குறித்த யுவதியை அடிக்கடி துன்புறுத்தி வந்தநிலையில், காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டு, குறித்த விடயம் நீதிமன்றம் வரை சென்றிருந்தது.
வழக்கு விசாரணையின் போது, குறித்த இளைஞன் தன்னை அடிக்கடி துன்புறுத்துவதாகவும், வற்புறுத்துவதாகவும் யுவதி தெரிவித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த இளைஞன் திடீரென யுவதியை நோக்கி ஓடிச் சென்று நீதிபதி முன்பாக மூன்று முறை யுவதியின் கன்னத்தில் அறைந்துள்ளார்.
அதன் பின் இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Discussion about this post