எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தல் நாட்டிற்கு மிகவும் அவசியம் வாய்ந்தது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நடத்திய மாநாட்டில் பேசிய அவர், அமெரிக்காவுடனான நீண்டகால உறவு, சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறை சுதந்திரம் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் பேசியுள்ளார்.
பிரஜைகள் தமது தேவைகளை அமைதியான முறையில் கேட்பதற்கும் அவர்கள் அரசாங்கத்தில் பங்கு கொள்வதற்குமான உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் சுதந்திரமான தேர்தல்களின் பெருமைமிக்க வரலாறு அந்த உரிமைகளை உறுதிப்படுத்தி இருக்கின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் ஜனநாயக நாட்டில் சட்டத்தின் ஆட்சி அவசியம் என வலியுறுத்திய அமெரிக்கத் தூதுவர், அனைத்து ஆதரப்பினரும் அதனை பாதுகாக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Discussion about this post