அமெரிக்கா தனது போக்கை மாற்றாத வரை அமெரிக்காவும், சீனாவும் தவிர்க்க முடியாத மோதலை சந்திக்க வேண்டி வருமென பெய்ஜிங்கின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையேயான உறவு எப்போதும் எதிரும், புதிருமாகவே இருந்து வருகிறது. ஆனால் கடந்த சில வருடங்களாக அமெரிக்கா சீனாவின் மீது வெளிப்படையாக ஆதிக்கம் செய்ய நினைப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அமெரிக்க இந்த போக்கை மாற்றாதவரை அமெரிக்கா, சீனாவிற்கும் இடையேயான மோதலை கட்டாயமாகத் தவிர்க்க முடியாதென பெய்ஜிங்கின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சர் குயின் கேங்க் கூறியுள்ளார்.
குயின் கேங்கின் இந்த கருத்துக்கள் செயற்கைக்கோள் கண்காணிப்பு பலூன் வெடிப்பு சம்பவம் போன்றவற்றைக் குறிக்கிறது.
மேலும் உக்ரைன் மற்றும் ரஷ்யப் போரினால் உலகின் இரண்டு பெரிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்டு வரும் பொருளாதார பிரச்சனையை அடிக்கோடிட்டுக் காட்டுவதாகத் தெரியவந்துள்ளது.
சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங்கின் அமெரிக்காவிற்கு எதிரான கருத்துக்களைக் கடந்த திங்களன்று பேசினார்.அமெரிக்க,சீனாவுடனான உறவுகள் மோசமடைந்து வருவதற்குச் சீனாவைக் கட்டுப்படுத்துவதற்கான அமெரிக்க முயற்சிகளைக் குற்றம் சாட்டி, பெய்ஜிங் நட்பைக் குறைத்துக் கொள்ள விரும்புவதாகக் கூறியுள்ளார்.
அமெரிக்கக் கொள்கைகளின் பரந்த கண்டனத்தில், “அமெரிக்கா சீனாவுடனான பொருளாதார போட்டியை விரும்புகிறது, ஆனால் மோதலை அல்ல என்று அதிபர் ஜோ பைடனின் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
“அமெரிக்க தரப்பு இதை மாற்றிக்கொள்ளாமல் அப்படியே தொடர்ந்தால், மோதலை யாராலும் தடுக்க முடியாது,” என்று வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.
Discussion about this post