இன்றைய நாள்
நாள் | செவ்வாய்க்கிழமை |
---|---|
திதி | அஷ்டமி |
நட்சத்திரம் | கிருத்திகை காலை 9.58 வரை பிறகு ரோகிணி |
யோகம் | மரணயோகம் காலை 9.58 வரை பிறகு அமிர்தயோகம் |
ராகுகாலம் | காலை 7.30 முதல் 9 வரை |
எமகண்டம் | காலை 10.30 முதல் 12 வரை |
நல்லநேரம் | காலை 6.30 முதல் 7.30 வரை / மாலை 4.30 முதல் 5.30 வரை |
சந்திராஷ்டமம் | சித்திரை காலை 9.58 வரை பிறகு சுவாதி |
சூலம் | கிழக்கு |
பரிகாரம் | தயிர் |
இன்றைய இராசி பலன்கள்.
மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஆடம்பர பொருட்கள் மீது ஆர்வம் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் இழுப்பறியாக இருந்து வந்த பண வரவு வந்து சேரும். தடைகள் பல வந்தாலும் அதை தகர்த்து எறியக்கூடிய பக்குவம் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மரியாதை அதிகரிக்கும்.
ரிஷபம்
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் காணக் கிடைக்காத புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்க காத்திருக்கிறது. தொலைதூர இடங்களில் இருந்து நற்செய்திகளை பெறுவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் துரிதமாக செயல்படுவதன் மூலம் நன்மைகள் நடக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பொறுப்புடன் இருப்பது நல்லது, அலட்சியம் வேண்டாம்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தெளிவான முடிவு எடுக்கக்கூடிய அமைப்பாக இருக்கிறது. எந்த ஒரு விஷயத்திலும் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்படுங்கள். குடும்ப உறவுகளுக்கு இடையே பேச்சில் இனிமை வேண்டும். சுய தொழிலில் லாபம் காண நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தயக்கங்கள் விலகும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வரவை காட்டிலும் செலவு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற வீண் ஆசைகளை தவிர்ப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் எந்த ஒரு முக்கியமான விஷயத்தையும் குடும்பத்தினரை ஆலோசித்து எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. எதை சொல்ல வேண்டுமானாலும் அதை சுருக்கமாக சொல்லுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய நபர்களுடைய அறிமுகம் வளர்ச்சியை கொடுக்கும் வகையில் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு நிதானம் தேவை.
கன்னி
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருக போகிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீர்ந்து, புதிய பாதைகள் திறக்கும் வழி அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கடினமான வேலைகளை கூட சுலபமாக செய்வீர்கள்.
துலாம்
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனக்குழப்பம் நிறைந்த நாளாக காணப்படுகிறது. எதுவும் சாதகமற்ற அமைப்பு என்பதால் அவசரப்படாமல் நிதானத்தை கையாளுவது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்க உடன் இருப்பவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நினைத்ததை சாதிப்பீர்கள்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வரவு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. கையில் பணம் புழங்கும் யோகம் ஒரு சிலருக்கு இருக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களுடைய அறிமுகம் சுய தொழில் செய்பவர்களுக்கு கிடைக்கப் போகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி நிமித்தமாக நீங்கள் எடுக்கும் முடிவுகள் சாதக பலன் கொடுக்கும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய எண்ணங்கள் ஈடேறக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. எல்லோரையும் திருப்தி படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தை கைவிட்டு விடுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மற்றவர்களின் பலவீனம் அறிந்து செயல்படுவீர்கள்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சூழ்நிலைக்கு ஏற்ப நீங்கள் முடிவெடுப்பீர்கள். தடைபட்ட சில விஷயங்கள் முடிவுக்கு வரும். கணவன் மனைவி உறவிற்குள் இருந்து வந்த அன்னோன்யம் வளரும். சுய தொழிலில் நீங்கள் வித்தியாசம் இல்லாமல் பழகுவது மற்றவர்களை எளிதில் கவரும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது.
கும்பம்
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் ஏட்டிக்கு போட்டி பேச்சு கொடுக்காமல் அமைதி காப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் சுய விருப்பத்தின் பேரில் முடிவு எடுப்பது நல்லது. எதிர்பாராத பணம் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உடன் இருப்பவர்களால் ஆதாயம் காணக்கூடிய யோகம் உண்டு.
மீனம்
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு ஜெயம் உண்டாகக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றியாகும். பணம் பல வழிகளில் இருந்தும் வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். சுய தொழிலில் லாபம் இரட்டிப்பாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளால் டென்ஷன் ஏற்படலாம் எனினும் மகிழ்ச்சியான செய்திகளை பெறுவீர்கள்.
Discussion about this post