நேற்றைய ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த தேசிய மக்கள் சக்தியின் நிவித்திகல பிரதேச சபைத் தேர்தல் வேட்பாளர் நிமல் அமரசிறி (61) இன்று உயிரிழந்துள்ளார்.
கண்ணில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா கருத்து தெரிவிக்கையில்,
“காயமடைந்த சுமார் 28 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர், அவர்களில் சிலர் சிகிச்சை பெற்று வெளியேறினர், மேலும் சிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இப்போது அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள நிவிதிகல உள்ளூராட்சி மன்றத்தின் எமது வேட்பாளர் நிமல் அமரசிறி என்ற சகோதரரே உயிரிழந்துள்ளார்.
தேர்தலை ஒத்திவைக்கும் சதிக்கு எதிராக ´கொழும்பிற்கு எதிர்ப்பு´ என்ற தலைப்பில் தேசிய மக்கள் சக்தியினால் நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை தாக்குதலை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post