தஜிகிஸ்தானில் முர்கோப் எனும் பகுதியில் இன்றையதினம் பாரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
காலை 6 மணியளவில் 6.8 ரிக்டராக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தஜிகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் உஸ்பெகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தானில் உணரப்பட்டுள்ளது.
தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டு 20 நிமிடங்கள் கழித்து ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரியவருகிறது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் அடுத்தடுத்து 4 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து பீதிக்குள்ளான மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Discussion about this post