இன்று நீரிழிவு நோயினால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றது. இவ்வாறு இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகும் நீரிழிவு நோயாளிகள், சில உணவு கட்டுப்பாட்டை மேற்கொண்டால் நிச்சயம் நோயிலிருந்து விடுபடலாம் என்பதை அறிந்து கொள்ளவும்.
என்ன உணவு எடுத்துக் கொள்ளலாம்?
நீரிழிவு நோயாளிகள் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. முக்கியமாக வாழைப்பூ, வாழைத்தண்டு, நெல்லிக்காய், வெந்தயம், பாகற்காய், கோவக்காய், கீரை வகைகள் இவற்றினை உணவுகளோடு கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் வெந்தயம் மற்றும் கருஞ்சீரகம் ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து அதனை வறுத்து பொடியாக அரைத்து வைத்துக்கொண்டு, தினமும் இரவு ஒரு ஸ்பூன் அளவு எடுத்து சுடுதண்ணீரில் கலந்து குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு நிச்சயம் குறையுமாம்.
அதேபோல் நடைப்பயிற்சி சைக்கிள் நீச்சல் பயிற்சி உள்ளிட்டவற்றை தொடர்ச்சியாக செய்ய வேண்டும் என்றும் மன அழுத்தம் இல்லாமல் வாழ பழகிக் கொண்டால் நீரிழிவு நோயிலிருந்து நிச்சயம் விடுபடலாம் என்றும் கூறப்படுகிறது.
Discussion about this post