கனடாவின் கரையோரப் பகுதிகளில் ஆயிரக் கணக்கானவர்கள் மின்சாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளது.
கடுமையான புயல் காற்று காரணமாக இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டுள்ளது. சுமார் ஆறாயிரம் பேர் வரையில் மின்சாரமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடுமையான பனிப் பொழிவு மற்றும் புயல் காற்று காரணமாக இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
நோவா ஸ்கோட்டியா, நியூ பிரவுன்ஸ்விக், பிரின்ஸ் எட்வர்ட் ஐலன்ட் போன்ற பகுதிகளைச் சேர்ந்த மின் பயனாளர்கள் இவ்வாறு மின்சார வசதியின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
மின்சாரம் துண்டிப்பு குறித்து பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்று வருவதாகவும், மின்சார இணைப்புக்களை மீள வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Discussion about this post