கனடாவின் றொரன்டோ மற்றும் தென் ஒன்றாரியோ பகுதிகளில் குறிப்பிடத்தக்களவு பனிப்புயல் தாக்கம் ஏற்படும் என கனேடிய சுற்றாடல் திணைக்களம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெக்ஸாஸ் பகுதியில் உருவாகும் தாழமுக்க நிலை ஒன்றாரியோ மாகாணத்தில் பனிப்பொழிவினையும் புயல் காற்றினையும் உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்படும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
எதிர்வரும் புதன் மற்றும் வியாழன் கிழமைகளில் 15 சென்றி மீற்றருக்கு மேற்பட்ட பனிப்பொழிவினை எதிர்பார்க்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் கூடுதல் அளவில் பனிப்பொழிவு நிலவும் எனவும், அந்தப் பகுதிகளில் வாகனங்களில் பயணம் செய்வது சிரமமானதாக காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை குறித்த எதிர்வுகூறல்களை கருத்திற் கொண்டு மக்கள் தங்களது பயணங்களை திட்டமிட்டுக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
Discussion about this post