கடந்த காலங்களில் வங்கிகள் மற்றும் அடமான மையங்களில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளில் கிட்டத்தட்ட எழுபது சதவிகிதம் விற்பனையாகியுள்ளதாக அடமான நிறுவன வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.
பணம் இல்லாததால் அடகு வைத்த நகைகளை மக்கள் மீட்கமுடியாமல் அவை விற்பனை செய்யப்பட்டுவதாக கூறும் அந்த வட்டாரங்கள், நகைகளை இழக்கும் போக்கு அதிகரித்து வருவதாகவும் கூறுகின்றன.
இந்த வருடத்தின் முதல் பத்து மாதங்களில் நாடு முழுவதும் சுமார் 40 இலட்சம் பேர் 19,300 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் அடகு வைத்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
Discussion about this post