உக்ரைனுடனான போர் காரணமாக சர்வதேச நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்ததோடு, ரஷ்யாவின் எரிபொருள் ஏற்றுமதியையும் தடை செய்தன.
இந்தச் சூழலில் ரஷ்யாவிடம் இருந்து சீனா தற்போது அதிக அளவில் எரிபொருள் இறக்குமதி செய்து வருகின்றது. இதே சமகாலத்தில் உக்ரைனின் பல நகரங்களில் ரஷ்ய படைகள் ஏவுகணைத் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன.
இந்த நிலையில் இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு இடையிலான காணொளி பேச்சுக்கள் இடம்பெற்றன.
இந்தப் பேச்சுக்களில் இரு நாடுகளும் தமது ஆயுதப் படைகளுக்கு இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பேசப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சீன – ரஷ்ய ஒன்றிணைவு குறித்து சீனா தனது மகிழ்ச்சியையும், எதிர்கால திட்டங்கள் குறித்த எதிர்வுகூறல்களையும் தெரிவித்துள்ளது.
சீனாவும் ரஷ்யாவும் ஒன்றிணைந்தால் உலக வளர்ச்சியின் முக்கிய விடயமாக அமையும் என இந்தப் பேச்சுக்களின் போது சீன அதிபர் ஜி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார்.
Discussion about this post