எதிர்வரும் தேர்தலுக்கான போராட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் புதிய படை ஒன்று உருவாக்கப்படும் என காலி முகத்திடல் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளர்களில் ஒருவராக செயற்பட்ட தனிஷ் அலி தெரிவித்துள்ளார்.
அதன் மூலம் கொழும்பு அதிகாரம் உறுதியாக கைப்பற்றப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறும் வேளையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த வன்முறைச் சம்பவங்களில் அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீடு எரிக்கப்பட்டமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பிலான வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக அவர் இரகசிய காவல்துறை பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Discussion about this post