23 வருடங்களின் பின்னர் தொடரூந்து மூலம் கொழும்பு – கோட்டைக்கான மரக்கறி போக்குவரத்து நேற்று முதல்
ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் நாடாளுமன்றில் முன்வைத்த பாதீட்டு யோசனைக்கு அமைய இந்த
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தொடரூந்து திணைக்களத்தின் வர்த்தக மற்றும் விற்பனை பிரிவினால், தொடரூந்து மூலமான மரக்கறி
போக்குவரத்துக்காக 5 புதிய பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த வேலைத்திட்டம் நானுஓயா தொடரூந்து நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டைக்கு நேற்று ஆரம்பிக்கப்பட்டது.
மரக்கறி தாங்கிய விசேட தொடரூந்து நேற்றிரவு 12 மணிக்கு கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தை வந்தடைந்தது.
அதில் கொண்டுவரப்பட்ட மரக்கறிகள் மெனிங் சந்தைக்கும், சிறப்பங்காடிகளுக்கும் விநியோகிக்கப்படவுள்ளன.
எவ்வாறாயினும் இந்த கடுகதி விசேட தொடரூந்தில், பயணிகள் செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என
தொடரூந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
Discussion about this post