கனடாவில் கிறிஸ்மஸ் மரங்களுக்கு தட்டுப்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காலநிலை மாற்றம் காரணமாக கிறிஸ்மஸ் மர செய்கைக்கு தாக்கம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சாதாரணமாக விற்பனை செய்யப்படக்கூடிய ஓர் மரமானது 8 முதல் 12 ஆண்டுகள் வரையில் வளர்க்கப்பட
வேண்டியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலநிலை மாற்றத்தினால் தற்பொழுது கிறிஸ்மஸ் மரங்களை செய்கை செய்வதில் சவால்களை எதிர்நோக்க
நேரிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிறிய மரங்களை வளர்த்து எடுப்பதில் பல சவால்கள் காணப்படுவதாக பிரிட்டிஷ் கொலம்பியாவின் வனப் பாதுகாப்பு
விஞ்ஞான பிரிவின் பொறுப்பாளர் ரிச்சர்ட் ஹேம்லின் தெரிவித்துள்ளார்.
Discussion about this post