சாதாரண மக்கள் பயன்படுத்தக்கூடிய ஆகக் குறைந்த செலவின் கீழ் விமான சேவைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
சர்வதேச விமான சேவைகள் தினம் மற்றும் இலங்கையின் விமான தொழிற்துறை ஆரம்பிக்கப்பட்டு 110 வருடங்கள் பூர்த்தியையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
விமான சேவையானது தனவந்தர்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்ட சேவையாக இருக்கக்கூடாது. உலகில் பல்வேறு நாடுகளில் வருமானம் குறைந்த மக்களுக்கு குறைந்த செலவில் பயணிக்க கூடிய பாதுகாப்பான விமான சேவைகளும் உள்ளன.
இருப்பினும் எமது நாட்டில் அது மிகவும் குறைவு. ஆகையால் நாம் இதனை பரீசிலித்து சாதாரண மற்றும் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கும் விமான சேவைகளை வழங்க வேண்டும் என கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
Discussion about this post