நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நவ ஜனதா பெரமுன எனும் குழுவினரே குறித்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
சீனாவிற்கு ஆதரவளிக்கும் குறித்த குழுவினர் கொழும்பிலுள்ள சீன தூதரகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நாடாளுமன்றத்தில் சீனாவிற்கு எதிராக கருத்து தெரிவித்ததுடன், கோ கோம் சீனா என கத்தியுள்ளார்.
மேலும் அவர், சீனா எமது நாட்டின் பொருளாதார வளங்களை ஆக்கிரமித்துள்ளதே தவிர, இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை.
இதேவேளை, சீனா எமது மக்களின் நண்பன் அல்ல ராஜபக்சக்களின் நண்பன் என்று தெரிவித்திருந்தார்.
சாணக்கியனின் குறித்த கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே நவ ஜனதா பெரமுன குழுவினரால் கொழும்பில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சீனாவின் செயல்திட்டங்களை ஆதரிப்பதாகவும், சாணக்கியனின் சீனா தொடர்பான கருத்துக்களை தாம் எதிர்ப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குறித்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post