லண்டனில் மக்கள் சிலர் உணவுக்காக மோதிக்கொள்ளும் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
பிரித்தானியாவில் உணவுகளின் விலை பல மடங்காக அதிகரித்துள்ளது.
மக்கள் கடுமையான நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளதுடன், உணவு வங்கிகளை நோக்கி செல்லும் போக்கு கடுமையாக அதிகரித்துள்ளதனை அவதானிக்க முடிந்துள்ளது.
மேலும் பல குடும்பங்கள் அரசாங்க உதவிகளை நம்பி வாழ்ந்து வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், பிரித்தானியாவில் வாழும் நடுத்தர மக்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள் என தெரியவந்துள்ளது.
லண்டனில் உள்ள, ஒரு டெஸ்கோ சூப்பர் மார்கெட்டில் நடந்த விடையம், அனைவரையும் அதிர்ச்சியடைந்துள்ளது.
இந்த காணொளியில் இருப்பவர்கள் விலை குறைக்கப்பட்ட உணவு பொருளை பெற்றுக் கொள்வதற்காக அடிதடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த டெஸ்கோ சூப்பர் மார்கெட்டில், மஞ்சல் ஸ்டிக்கர் ஒட்டிய விலை குறைந்த உணவுப் பொருட்கள் வைக்கப்பட்ட உடனே அதனை முண்டி அடித்த மக்கள் ஒருவரை ஒருவர் தள்ளி விட்டு, உணவுகளை தாம் எடுத்துக் கொண்டார்கள்.
இதில் சிறுமி ஒருவர் மாட்டிக் கொண்டுள்ளதுடன், சிறுமி என்று கூடப் பாரமல் அவரையும் தள்ளி விட்டு, உணவை கைப்பற்ற மக்கள் முனைந்த காட்சி பெரும் அதிர்ச்சி தருகிறது.
Discussion about this post