புத்தளம் – சிலாபம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த யாசகர் ஒருவரிடம் 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபா பணமும் அவரது பெயரில் ஐந்து வங்கிக் கணக்கு புத்தகங்களும் காணப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் – சிலாபம் வீதி ஆணைவிழுந்தான் பகுதியில் கடந்த சனிக்கிழமை மோட்டார் சைக்கிள் மோதியதில் யாசகர் ஒருவர் காயமடைந்தார்.
காயமடைந்தவர் ஆணைவிழுந்தான் பிரதேச மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். எனினும் யாசகர் சிகிச்சை பலனின்றி கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
உடப்பு பிரதேசத்தைச் சேர்ந்த கதிரேசன் பாலமுருகன் (வயது- 49) என்ற யாசகரே உயிரிழந்தவராவார்.
உயிரிழந்த யாசகரின் பையை சோதனை செய்த போதே அதில் ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபா பணம் மற்றும் 47 ஆயிரம் ரூபா மதிப்புள்ள 5 வங்கிக்கணக்கு புத்தகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
Discussion about this post