அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில், பிறந்த பெண் குழந்தைக்கு பதிலாக ஆண் குழந்தையை மாற்றினார் என்று கூறப்படும் பெண்ணொருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பதவிய சிறிபுர பிரதேசத்தை சேர்ந்த 32 வயதான பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார் என்று அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இந்த பெண்ணும் கலேன்பிந்துவெவ, தோடாமடுவ சிவலாகுளம் பகுதியை சேர்ந்த 42 வயதான பெண்ணும் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் குழந்தைகளை பிரசவித்துள்ளனர்.
குழந்தைகள் பிறந்த பின்னர், குழந்தைகள் சுகாதார பராமரிப்பு பிரிவில் வைக்கப்பட்டிருந்த போது, சந்தேக நபரான பெண், தனக்கு பிறந்த பெண் குழந்தையை வைத்து விட்டு, அங்கிருந்த ஆண் குழந்தையை எடுத்துக்கொண்டார் என்று 42 வயதான பெண் வைத்தியசாலை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தின் அதிகாரிகள், பதவிய, சிறிபுர பகுதியை சேர்ந்த 32 வயதான பெண்ணை கைது செய்து, நீதிமன்றத்தில் முற்படுத்தியுள்ளனர்.
Discussion about this post