இலங்கையில் இருந்து டுபாய் நாட்டுக்கு சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து ஓமான் நாட்டுக்கு அடிமையாக பெண்கள் விற்கப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 150 பெண்கள் இவ்வாறு அடிமைகளாக விற்கப்பட்டுள்ளனர் என்று தெரியவருகின்றது. அவர்கள் தங்களைக் காபாற்றுமாறு கதறும் வீடியோ பதிவு ஒன்று வெளியாகியுள்ளது.
இலங்கையிலுள்ள ஏஜென்ஸியும் இங்கே ஓமான் நாட்டிலுள்ள ஏஜென்ஸியும் தங்களை ஏமாற்றி, சுற்றுலா விசாவில் அழைத்து வந்து அடிமைகளாக விற்று விட்டனர் என்று அந்த வீடியோ பதிவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொருவரிடமும் தலா 18 இலட்சம் ரூபாவை வாங்கிக்கொண்டே அவர்களை அடிமைகளாக விற்றுள்ளனர். அவர்களின் கடவுச் சீட்டுக்களைப் பறிமுதல் செய்ததுடன், தொலைபேசிப் பாவனைக்கும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர் என்று அந்தப் பெண்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இலங்கை அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்துத் தங்களைக் காப்பாற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post