இலங்கையின் நிலைமை சிப்பாப்வேயைப் போன்று இருக்காது என்று தெரிவித்துள்ள கலாநிதி ரொஹான் பெத்தியகொட, பலமுறை திவாலாவிட்டது என்று அறிவிக்கப்பட்ட ஆர்ஜென்ரீனாவை ஒத்ததாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
100 ஆண்டுகளுக்கு முன்னர் ஆர்ஜென்டீனா உலகின் 15ஆவது நாடாக இருந்தது என்று தெரிவித்த அவர், இன்று அது உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகும் என்று குறிப்பிட்டார்.
கடந்த 20 ஆண்டுகளில் ஆர்ஜென்ரீனா ஒரு முறை அல்ல, 9 தடவைகள் திவாலாகியது என்று அறிவிக்கப்பட்டது என்று கூறிய அவர், எதிர்வரும் காலங்களில் இலங்கை மீண்டும் மீண்டும் திவாலாகும் என்று எதிர்பார்க்கலாம் என்று கூறினார்.
இலங்கை இந்த நெருக்கடியில் இருந்து மீள்வது எளிதல்ல என்று கூறிய அவர், இந்தப் பிரச்சினை அரசியல்வாதிகள் கூறுவது போன்று ஓரிரு ஆண்டுகளில் முடியப் போவதில்லை என்று குறிப்பிட்டார்.
இலங்கை மீண்டெழுவதற்கு 10 அல்லது 20 ஆண்டுகள் செல்லலாம். அல்லது ஒரு தலைமுறைகூட ஆகலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post