சர்வதேச நாணய நிதியத்தால் அரசாங்கத்துக்கு முன்வைக்கப்பட்ட இரண்டு முக்கிய வருவாய் யோசனைகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இலவச சேவையாக இருக்கும் இரு சேவைகளின் அடிப்படை செலவினங்களை ஈடுகட்ட வேண்டும் என்ற பரிந்துரையுடன் சர்வதேச நாணய நிதியம் இந்த வருவாய் யோசனைகளை முன்வைத்திருந்தது.
அரசாங்க மருத்துவமனைகளின் வெளிநோயாளர் பிரிவுகளில் செய்யப்படும் சிகிச்சைக்கு நோயாளிகளிடம் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்பது முதல் யோசனையாகும்.
வறிய நிலையிலுள்ள மக்களுக்கு மட்டுமே நிவாரணம் வழங்க வேண்டும் என இரண்டாவது யோசனையை சர்வதேச நாணய நிதியம் முன்வைத்திருந்தது.
ஆயினும் இந்த யோசனைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது என்று கூறப்படுகின்றது.
Discussion about this post