மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டி ஒழுங்குப்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் மேலதிகமாக ஐந்து லீற்றர் எரிபொருள் ஒதுக்கத்தை பெற்றுக்கொள்வதற்காக இதுவரை 7 ஆயிரத்து 675 முச்சக்கரவண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என போக்குவரத்து அதிகார சபையின் முச்சக்கர வண்டி பணியகம் தெரிவித்துள்ளது.
இதுவரை முச்சக்கரவண்டிகளுக்கு வாராந்தம் 5 லீற்றர் எரிபொருள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
தற்போது இந்த பதிவு நடவடிக்கை ஊடாக 10 லீற்றராக அதிகரிக்கப்படவுள்ளது.
கடந்த முதலாம் திகதி தொடக்கம் நாளை வரை இந்த பதிவு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.
மேல் மாகாணத்தில் மாத்திரம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள குறித்த வேலைத்திட்டம் விரைவில் ஏனைய மாகாணங்களுக்கு விஸ்தரிக்கப்படவுள்ளது என போக்குவரத்து அதிகார சபையின் முச்சக்கர வண்டி பணியகத்தின் பிரதானி ஜீவிந்த கீர்த்திரத்ன தெரிவித்தார்.
Discussion about this post