முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனாத் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதன் காரணமாக அவர் ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதையடுத்து ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற அவர் தற்போது வீடு திரும்பியுள்ளார் என்று வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Discussion about this post