ஹெரோய்ன் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவின், போதைப் பொருள் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் வைத்து யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவின், போதைப் பொருள் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 40 மற்றும் 42 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது என்று போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் தெ.மேனன் தெரிவித்தார்.
சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் சந்தேகநபர்கள் முற்படுத்தப்படுவார்கள் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
Discussion about this post