இலங்கையின் எரிபொருள் தாங்கிக் கப்பல்கள் சீன கடற்படையின் கப்பல்களுக்கு இரகசியமாக ஆழ் கடலில் எரிபொருள் நிரப்புவது தொடர்பில் இலங்கையிடம் இந்தியா கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது.
கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்புவது தொடர்பில், வெளிப்படையான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை கொண்டு வர வேண்டும் என்று இலங்கையை புதுடில்லி வலியுறுத்தியுள்ளது.
சீன இராணுவக் கப்பல்களை அம்பாந்தோட்டை அல்லது கொழும்பு துறைமுகங்களில் நிறுத்தி வைக்கவோ அல்லது எரிபொருள் நிரப்பவோ அனுமதிக்கக்கூடாது என்று இந்தியா கேட்டுள்ளது என்று இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பில் உள்ள இராஜதந்திரிகள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து இலங்கை கப்பல்கள் எரிபொருளை ஏற்றி வருவதும், சீனப் போர்க் கப்பல்களுக்கு ஆழ்கடலில் எரிபொருள் நிரப்புவதும் இந்தியா மற்றும் அமெரிக்காவை கவலையடையச் செய்துள்ளது என்று இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post