நாளை கொழும்பில் அரசாங்கத்துக்கு எதிராக பெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
மருதானை சுற்றுவட்டத்தில் இருந்து இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பமாகவுள்ளது. எதிரணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகள், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலர் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் பங்கேற்கவுள்ளன என தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் போராட்டம் அரசாங்கத்துக்குக் கடும் நெருக்கடிகளைக் கொடுக்கும் என்று கூறப்படும் நிலையில், அமைச்சரவையிலும் இது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. நாடு ஸ்திரத்தன்மையை நோக்கிப் பயணிக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் இவ்வாறான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவது அநாகரிகமானது என்று அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதேநேரம், நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஆர்ப்பாட்டங்களை கைவிட வேண்டும் என்று பல வர்த்தக சம்மேளனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
அதேவேளை, போராட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்திருந்த பொதுஜன பெரமுன உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க, எதையும் எதிர்கொள்ள நாம் தயார் என்று கூறியிருந்தார்.
Discussion about this post