நாட்டில் கல்வி முறையை மாற்றுவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய எதிர்வரும் ஜனவரி மாதத்துக்குள் கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் இவ்வாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.
கொழும்பில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கல்வி முறையில் மாற்றம் தொடர்பான திருத்தங்களை 6 பகுதிகளின் அடிப்படையில் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கிறோம்.
கல்வி சீர்திருத்தத்தை முன்னெடுப்பதை விட, இன்று நாம் மாற்றத்துக்கு செல்ல வேண்டும். கல்வி முறை மாற்றத்தை 6 பாகங்களாக திட்டமிட்டுள்ளோம்.
அதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதத்துக்குள் நிர்வாகத்தில் கல்வி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இல்லையெனில் நாம் திறனை வளர்த்துக்கொள்ள முடியாது என்றார்.
Discussion about this post