ஆலயத்துக்குச் சென்றவர் அங்குள்ள தண்ணீர் குழாயில் கால் கழுவ முயன்றபோது வழுக்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று சாவகச்சேரி, மட்டுவிலில் உள்ள ஆலயம் ஒன்றில் நடந்துள்ளது. மட்டுவில் தெற்கைச் சேர்ந்த 52 வயதான ச.கேசவநாதன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
ஆலயத்துக்குச் சென்ற வழுக்கி வீழ்ந்து மயக்கமுற்ற நிலையில், சாவகச்சேரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். ஆயினும் சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்தார்.
Discussion about this post