யாழ்ப்பாணத்தில் சூரன் போரில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வாள்வெட்டில் முடிந்ததில் இருவர் காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வட்டுக்கோட்டை, மாவடி பங்குரு முருகன் ஆலயத்தில் சூரன்போர் நேற்று மாலை நடைபெற்றது. அங்கு வந்திருந்த இளைஞர்களிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கமே வாள்வெட்டில் முடிந்துள்ளது.
வாள்வெட்டுக்கு இலக்காக 38 மற்றும் 33 வயதுடைய இருவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Discussion about this post