முல்லைத்தீவு, விசுவமடுவில் உள்ள தேராவில் மாவீரர் துயிலும் இல்லம் சிரமதானப் பணிகள் மூலம் இன்று துப்புரவு செய்யப்பட்டது.
மாவீரர் நாள் நினைவேந்தல் நவம்பர் 27ஆம் திகதி இடம்பெற உள்ள நிலையில் துயிலுமில்லங்களைத் துப்புரவு செய்யும் நடவடிக்கைகள் வடக்கு, கிழக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை ஒன்பது முப்பது மணி அளவில் தேராவில் துயிலும் இல்ல வளாகத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்திய பின்னர் மக்கள் சிரமதான பணியில் ஈடுபட்டனர்.
தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழு மற்றும் மாவீரர்களின் பெற்றோர், நலன் விரும்பிகள், சமூக செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலர் இணைந்து துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டனர்.
அதேவேளை, துப்புரவுப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது படைப் புலனாய்வாளர்கள் அந்தப் பகுதிக்கு வந்து ஒளிப்படங்கள் எடுத்தனர் என்று அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
Discussion about this post