15 வயதுச் சிறுமி ஒருவரைத் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 20 வயது இளைஞர் ஒருவர் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் நேற்று (27) கைது செய்யப்பட்டார்.
கல்வியங்காட்டைச் சேர்ந்த இந்த இளைஞர் தற்போது பிரான்ஸ் நாட்டில் வசிக்கின்றார். சிறுமி அச்சுவேலியைச் சேர்ந்தவர்.
பிரான்ஸில் இருந்து ஒரு மாதத்துக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்த இளைஞர், 15 வயதுச் சிறுமியுடன் தலைமறைவானமை தொடர்பில் சிறுமியின் உறவினர்களால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த முறைப்பாடு தொடர்பாக அச்சுவேலிப் பொலிஸார் காங்கேசன்துறை விசேட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியிருந்தனர்.
இது தொடர்பில் நடவடிக்கை எடுத்த காங்கேசன்துறை விசேட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் நேற்று (28) சந்தேகநபரைக் கைது செய்ததுடன் சிறுமியையும் மீட்டனர்.
இளைஞரும் சிறுமியும் காதலித்துள்ளனர் என்றும், திருமணம் செய்து ஒன்றாக வாழ்ந்துள்ளனர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ள நிலையில், மேலதிக நடவடிக்கைகளுக்காக சந்தேகநபர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படுவார் என்று காங்கேசன்துறை விசேட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்தனர்.
Discussion about this post