அடுத்தவாரம் கொழும்பில் பெரும் எடுப்பில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பல அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர் இயக்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து எதிர்வரும் 2ஆம் திகதி புதன்கிழமை கொழும்பில் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.
அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிரான கூட்டறிக்கையில் குழுக்களின் பிரதிநிதிகள் நேற்று கொழும்பில் கையெழுத்திட்டனர்.
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் அரசாங்கத்தையும் வெளியேற்றுவதற்கான முதல் படியாக” அடுத்த வாரம் பெரும் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பல்வேறு குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
கொழும்பு 10 இல் உள்ள எல்பின்ஸ்டோன் திரையரங்கில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு ஆர்ப்பாட்டப் பேரணி ஆரம்பமாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post