இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 60 பேர் டெங்குத் தொற்றால் உயிரிழந்துள்ளனர். சுமார் 62 ஆயிரம் பேர் டெங்குத் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர் என்று டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் மற்றும் 50 வயதுக்குக் குறைவானவர்கள்.
இந்த ஆண்டு இனங்காணப்பட்டுள்ள டெங்குத் தொற்றாளர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 3 மடங்கு அதிகரித்துள்ளது.
சில நாள்கள் காய்ச்சல் நீடிக்குமானால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.
கர்ப்பிணிகள் மற்றும் சிறுவர்கள் காய்ச்சல் தொடர்பில் அவதானத்துடன் இருக்க வேண்டும். காய்ச்சல் ஏற்பட்டால் பரசிட்டமோல் மட்டும் அருந்த வேண்டும்.- என்றார்.
Discussion about this post