வவுனியாவில் போதை மாத்திரைகளை கொள்வனவு செய்தனர் என்று கூறப்படும் தனியார் வைத்தியசாலை மற்றும் வைத்தியர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.மகேந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது வவுனியாவில் உள்ள அரச வைத்தியர் ஒருவர் தனது தனியார் வைத்தியசாலையின் பெயரில் போதை மாத்திரைகளை கொள்வனவு செய்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது எமக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் எமக்கு அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளது. தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவி்தார்.
போதை மாத்திரை கொள்வனவு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றமையால் வடமாகாண சுகாதா சேவைகள் திணைக்களம் இரண்டு மாவட்டங்களையும் உள்ளக்கி விசாரணை செய்ய விசேட குழு ஒன்றை நியமித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post