அரச வருவாயை அதிகரிப்பதற்காக மேலும் 4 வரிகளை அரசாங்கம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது என்று நிதி அமைச்சு தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
காணி வரி, சொத்து வரி உள்ளிட்ட 4 வரிகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இந்த வரிகளின் சதவீதங்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை, ஆனால் நவம்பர் மாதம் முதல் இந்த 4 வரிகளும் விதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது அரசாங்கத்துக்கு கிடைக்கும் ஆண்டு நேரடி வரி வருவாயை அதிகரிக்க வேண்டும் என உலக வங்கி போன்ற சர்வதேச ஆதரவு அமைப்புகள் பரிந்துரை செய்துள்ளன.
2022 ஆம் ஆண்டில் அரசாங்க வருமானமாக கருதப்படும் 2 ஆயிரத்து 56 பில்லியன் ரூபாவை 2023 ஆம் ஆண்டில் 3 ஆயிரம் 500 பில்லியன் ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என்று அந்த ஆதரவு நிறுவனங்கள் அரசாங்கத்துக்கு கடுமையாகப் பரிந்துரைத்துள்ளன.
Discussion about this post