நிறைவேற்றப்பட்டுள்ள 22ஆவது திருத்தத்தால் ராஜபக்ச குடும்பத்தினர் இடையே பெரும் மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளது என்று அறிய முடிகின்றது.
22ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த பலர் பொதுஜன பெரமுனவுக்குத் தெரிவித்திருந்தனர்.
22ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என அந்தக் குடும்பத்தின் சிரேஷ்ட உறுப்பினர் சமல் ராஜபக்ச, பல பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கு முன்பாக தனது கருத்தை வெளிப்படுத்தியதும், பஸில் ராஜபக்சவுக்கு எதிராக சமல் ராஜபக்ச கருத்ததுமே இந்த மோதல் நிலைக்குக் காரணம் என்று தெரியவருகின்றது.
கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலுகாக இரட்டை பிரஜாவுரிமையை இரத்துச் செய்தமை போன்று பஸில் ராஜபக்ச நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்க வேண்டுமாயின் இரட்டை பிரஜாவுரிமையை இரத்து செய்ய வேண்டும் சமல் ராஜபக்ச கண்டிப்புடன் கூறியுள்ளார்.
அத்துடன் பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை நாமல் ராஜபக்சவுக்கு வழங்குவது தொடர்பிலும் சமல் எதிர்ப்புத் தெரிவத்துள்ளார் என்று அறிய முடிகின்றது. அண்மைய நாள்களில் நாமல் ராஜபசவால் ஏற்பாடு செய்யப்பட்ட எந்தக் கலந்துரையாடலிலும் சமல் ராஜபக்ச அல்லது ஷசீந்திர ராஜபக்ச பங்கேற்கவில்லை.
இந்த விடயங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மௌனமாக இருக்கின்றார் என்றும், முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச சமல் ராஜபக்சவுடன் இணைந்து செயற்படுகின்றார் என்றும் பெரமுன உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
Discussion about this post