24 மணி நேரத்துக்கும் மேலாகக் காய்ச்சல் இருந்தால் உடனடியாக வைத்தியரை நாட வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் டெங்கு ஒழிப்புப் பிரிவுப் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தபோது, இப்போது இலங்கையில் டெங்குத் தொற்று தீவிரமாகியுள்ளது என்று குறிப்பிட்டார்.
அடையாளம் காணப்பட்ட 31 சுகாதார வைத்திய பிரிவுகளில் டெங்குத் தொற்று ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது. காய்ச்சல் இருக்குமாயின், ஓய்வு எடுப்பது முக்கியமாகும். 24 மணித்தியாலயத்துக்கு மேலாக காய்ச்சல் இருக்குமாயின் வைத்தியரை உடனடியாக நாட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாகவு சளிக் காய்ச்சல் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. சளிக் காய்ச்சல் பூரணமாக குணமடையாது பாதிப்புக்களை ஏற்படுத்தும் நிலைமை காணப்படுவதால் சளிக் காய்ச்சலில் பீடிக்கப்பட்டவர்களும் உடல்நிலை தொடர்பில் தீவிர அவதானம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Discussion about this post