இலங்கையில் 4 பேரைக்கொண்ட குடும்பம் ஒன்று அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மாதமொன்றுக்கு 53 ஆயிரத்து 840 ரூபா தேவைப்படுகிறது என குடிசன மதிப்பீட்டு புள்ளி விவரவியல் திணைக்கள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிசன மதிப்பீட்டு புள்ளி விவரவியல் திணைக்களத்தால் மாதாந்தம் வெளியிடப்படும் அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் தனிநபர் ஒருவரின் அடிப்படைத் தேவைகளுக்காக 13 ஆயிரத்து 138 ரூபாவும், ஓகஸ்ட் மாதத்தில் 13 ஆயிரத்து 460 ரூபாவும் காணப்பட்டது.
கொழும்பு மாவட்டத்தில் தனி நபர் ஒருவருக்கு மாதாந்தச் செலவாக 14 ஆயிரத்து 517 ரூபாவும், மொனராகலை மாவட்டத்தில் தனி நபர் ஒருவரின் மாதாந்த செலவாக 12 ஆயிரத்து 870 ரூபாவாகவும் காணப்படுகின்றது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post