ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நேற்று அவசர சந்திப்பு ஒன்று நடந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சந்திப்பு நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடந்துள்ளது என்று கூறப்படுகின்றது. தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக மஹிந்த ராஜபக்ச நீண்ட நேரம் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, நேற்றுமுன்தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுக்கும் இடையே தொலைபேசி வாயிலாக கலந்துரையாடல் நடந்திருந்தது.
இந்தநிலையில் நேற்று மஹிந்த ராஜபக்ச அவசரமாக ஜனாதிபதியைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளமை கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post