முல்லைத்தீவு கல்வி வலய பாடசாலை மாணவர்களை பாடசாலை நேரத்தில் தனியார் கல்வி நிறுவனமொன்று திரையரங்குக்கு அழைத்து சென்றமை தொடர்பாக வட மாகாண கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.
அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்காகவே மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்தத் தனியார் நிறுவனம் இதற்காக பாடசாலை மாணவர்களிடமிருந்து பணம் அறவீடு செய்துள்ளது என்றும் கூறப்படுகின்றது. மாணவர் ஒருவரிடம் இருந்து ஆயிரத்து 500 ரூபா இதற்காக அறவிடப்பட்டுள்ளது.
வார இறுதி நாட்களில் தனியார் கல்வி நிறுவனச் செயற்பாட்டுக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காகவே பாடசாலை நாளில் மாணவர்கள் திரையரங்குக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகின்றது.
Discussion about this post