கோத்தாபய ராஜபக்சவின் அரசாங்கத்தின் கீழு் மேற்கொள்ளப்பட்ட தவறான பொருளாதார முகாமைத்துவத் தீர்மானங்களாலேயே மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்று தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட இரு அடிப்படை உரிமை மீறல் மனுக்களைப் பரிசீலனை செய்ய வழங்கிய உத்தரவின் அடிப்படையில் விசேட கணக்காய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று தேசிய கணக்காய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்று கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணைக்காகப் பிரதிக் கணக்காளர் நாயகம் ஒருவரின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. டொலரின் பெறுமதியை 203 ரூபாவாகப் பேணியமை, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து உதவிகளைப் பெறுவதில் காட்டிய தாமதம், கடந்த ஆண்டு ஜனவரி 18ஆம் திகதி 500 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இறையாண்மை பத்திரங்களை மீளச் செலுத்தியமை என்பன தொடர்பாக கணக்காய்வு நடத்தப்படவுள்ளது.
இந்தக் கணக்காய்வு தொடர்பான தகவல்கள் இலங்கை மத்திய வங்கி மற்றும் திறைசேரியிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்படும் என்று கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
Discussion about this post