இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த நீதிமன்றத்தில் முன்னிலையாகிய நிலையில், கடும் நிபந்தனைக்கு மத்தியில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளுக்காக நீதிமன்றில் முன்னிலையாகாத பின்னணியில், சனத் நிஷாந்தவை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில், சட்டத்தரணிகளின் ஊடாக சனத் நிஷாந்த, நீதிமன்றத்தில் இன்று முன்னிலையாகியிருந்தார். நாளாந்தம் தனிப்பட்ட ரீதியில் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என நீதிபதிகள் குழாம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Discussion about this post